காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் மாத்திரமே வாக்குமூலத்தை பெற வேண்டியுள்ளது என்று குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஏனைய சகலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுகவீனமாக காரணமாக அவர் திணைக்களத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.
சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குமூல அறிக்கைகள் ஆறு சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவிடம் வழங்கப்பட்டு, அவர்கள் அவற்றை ஆராய்ந்த பின்னர், சட்டமா அதிபருக்கு அறிவிப்பார்கள்.
பின்னர் சட்டமா அதிபர் அடுத்த கட்ட விசாரணைகளை நடத்தும் ஆலோசனைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post