இந்தியாவின் ராஜஸ்தானிலுள்ள அல்வார் என்ற இடத்தில், 82 வயதுடைய ஷிவ்தயாள் ஷர்மா
என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக ரயில் பாதையோரமாகச் சென்றுள்ளார்.
அப்போது, வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் ஒன்று, மேய்ந்துகொண்டிருந்த பசு ஒன்றின் மீது மோத, அந்த பசு சுமார்
100 மீற்றர் உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தூக்கி வீசப்பட்ட பசு ஷர்மா மீது வந்து விழ, ஷர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதே நேரத்தில், ஷர்மாவுக்கு அருகில் நின்ற ஒருவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து, பசுக்கள் ரயில் தண்டவாளங்களுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், அங்குள்ள
புல், உணவுக்கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டுவருவதுடன், சில இடங்களில் தண்டவாளங்களை நெருங்க முடியாத
வகையில் வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Discussion about this post