இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் தூதுவர்கள் , சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிலும், பிராந்தியத்திலும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பான பேச்சுக்களுக்காக அவுஸ்திரேலிய, இந்திய, ஜப்பான் தூதரகங்களைச் சேர்ந்த எனது சகாக்களை வரவேற்று மகிழ்ச்சியடைந்தேன் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா மக்களுக்காக எமது உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளும் பிராந்தியப் பங்காளிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நான் நன்றியடையவனாக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post