சிறிலங்கா அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நிச்சயம் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் ஆலோசகருமான ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் (Vajira Abeywardena) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் குழப்பம்
இதன் போது கருத்து வெளியிட்ட அதிபரின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன, “அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிபர் தேர்தலை நாடுவாரா இல்லையா என்பதில் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார்” என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post