சிறிலங்காவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 986 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 10 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 480 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 313 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தளை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இந்த மாவட்டங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
Discussion about this post