சிறிலங்காவுக்கான புதிய திட்டமொன்றுக்கு சிறிலங்காவின் கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நாடு முகம்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்காவுக்குத் தமது குழுவொன்று வரவுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை வழங்குவதற்கு, சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் அவசியம் எனவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவில் ஏற்பட்ட ஊழல்கள், நிர்வாக சீரின்மை மற்றும் கொரோனா தொற்றுக்கள் போன்றவற்றால் கடன்தொகையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் சிறிலங்காவின் கடன் தொகையானது 6.2 பில்லியன் அமெரிக்க டொலராக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டிருந்தது.
Discussion about this post