சிறிலங்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
நேற்று 5 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.
உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்களில் மூவர் ஆண்கள், இருவர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் மேலும் 119 பேர் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா வைத்தியசாலையின் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post