தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாய ராஜபக்ச 15 நாள்களுக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச அங்கு தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கருதியே அந்த நாட்டு அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் இருந்து மாலைதீவுக்குச் சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவர் அங்கிருந்து சவூதிக்குச் செல்வார் என்று கூறப்பட்டபோதும், அவர் தற்போதும் சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளார்.
Discussion about this post