முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாள்கள் தங்கியிருக்க அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை திரும்பவிருந்தார். ஆயினும் அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் இந்த மாத இறுதி வாரம் வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடந்த போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதியாக பதவி வகித்த கோத்தாபய ராஜபக்ச, நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
மாலைதீவில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அவருக்கு சிங்கப்பூரில் 14 நாள்கள் தங்கியிருக்க மாத்திரமே நுழைவிசைவு வழங்கப்பட்டது.
அவரது நுழைவிசைவுக் காலம் முடிவடையவுள்ள நிலையில் நுழைவிசைவு அனுமதியை நீடிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post