தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, ராஜ்கிரணால் அறிமுகப்பட்டார். கவுண்டணி, செந்தில் உச்சத்தில் இருக்கும் போது நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் இடத்தினை பிடித்திருக்கிறார். 2000களின் துவக்கத்தில் இருந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தன் திறமையை வெளிக்காட்டினார்.சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நெருக்கடிகளாலும் பஞ்சாயத்துக்களாலும் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த பல கலைஞர்கள் விமர்சித்து பேசி வந்தனர். அதிலும் சிலர் வடிவேலுவை புகழ்ந்து பேசியும் வந்தனர்.சமீபத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி படங்களில் காமெடி ரோல்களில் நடித்த சாமிநாதன் வடிவேலு பற்றி சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். ராஜ்கிரண் ஆபிஸில் ஆபிஸ் பாயாக வடிவேலு இருப்பார். அப்போது நான் அங்கு போகும் போது அண்ணே எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க என்று கேட்பார். பின் படிப்படியாக வளர்ந்துவிட்டார். பல வருடங்கள் கழித்து ஆறு படத்தில் அவருடன் நடித்தேன்.அப்போது வடிவெலு உச்சக்கட்டத்தில் வளர்ந்துவிட்டார். அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் லயலாக் பேசுவதற்கு முன் என்னிடம் வந்து என்னங்க டயலாக்கெல்லாம் பார்த்துவிட்டீங்களா? என்று கேட்டார். நானும் ஆமாம் என்று சொல்லி டயலாக்கை சொல்ல ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் மாத்துங்க நல்லா இல்லை என்று வடிவேலு சொன்னார்.அதை பல முறை மாத்துங்க என்று சொல்லிக்கொண்டே இருந்த போது ஒரு கட்டத்தில் நான் அவரிடம் வடிவேலு நீங்கள் நல்ல நடிகர் தான். நான் முதலில் சொல்கிறேன், பின் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்கிறேன். இப்படி எதற்கெடுத்தாலும் நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டேன். பின் ஹரியின் துணையோ ஒருவழியாக அந்த டேக் ஓகே ஆனது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post