திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள்
காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (23-09-2023) மாலை தானியகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தானியகம பகுதியில் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சிகை அலங்கார நிலையத்தில்
மோதி விபத்துக்குள்ளானதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் காயம் அடைந்தவர்களில் ஒருவர் கடற்படை தளத்திற்குச்
சொந்தமான வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்கு உள்ளான 39 வயதான கடற்படை உத்தியோகத்தரான என்.
எஸ். மதுஷங்க திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தின்போது, சிகை அலங்கார நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும்
சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post