சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப் பேச்சுக்களை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது.
நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
‘சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத்தொடர்ந்து, நாம் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு இருதரப்பு மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துவருகின்றோம்.
தெளிவூட்டல் காட்சிப்படுத்தல் மூலம் கடந்த மாதம் 23 ஆம் திகதி இதுகுறித்து அனைத்துக் கடன் வழங்குநர்களுக்கும் விளக்கமளித்தோம்.
இருதரப்புக் கடன் வழங்குநர்களுடனான பேச்சுகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்’ என்று ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதியின் ஜப்பான் பயணத்தின்போது அந்தநாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடனும், இங்கிலாந்து பயணத்தின்போது அரச தலைவர்கள் சிலருடனும், மணிலாவில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன்மறுசீரமைப்பின் ஊடாக மீளச்செலுத்த வேண்டியுள்ள கடன்களின் அளவைப் பெருமளவுக“குக் குறைத்துக்கொள்வதன் மூலம் வெளிநாட்டுக் கையிருப்பின் அளவை சாதகமான மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கும், முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post