வடக்கில் தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில், இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து வருகின்றது. அதனால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று இடர் முகாமைத்துப் பிரிவு எச்சரித்துள்ளது.
தற்போது இரணைமடுக்குளத்தின் நீர் கொள்ளளவு 36 அடியாக உள்ள நிலையில், தற்போது நீர்மட்டம் 35 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை கிடைத்தால், நீர்வரத்தைக் கருத்திற் கொண்டு இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இரணைமடுக்குளத்தின் தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பாக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post