கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அருகில் மாவீரர் நாள் நினைவேந்தல் மேற்கொள்ளப்படும் இடம் இன்று ஏற்பாட்டுக் குழுவால் துப்புரவாக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் அதற்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
வழமையாக நினைவேந்தல் மேற்கொள்ளப்படும் இடத்தைச் சுற்றி இராணுவத்தினர் பௌத்த கொடிகளை நடுவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு சென்று அதைத் தடுத்து நிறுத்தினார்.
அதன்பின்னர் அந்தப் பகுதியில் ஏற்பாட்டுக் குழுவினர் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர். சிரமதானப் பணிகளில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் நடந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post