இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்கள், மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன், மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும் என்று கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் யாழ் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன், இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி, வேறு பல நாடுகளிலும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் போராட்டங்களைக் கைவிட்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன், இவ்வாறான போராட்டங்களால் எந்தவிதப் பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர்களாக குமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோரும், மலிங்க, சனத் ஜெயசூரிய, மத்தியூஸ் போன்ற முன்னணி வீரர்களும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post