நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதித்ததால் இன்று நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறாது. எனினும் நாளை சனிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று நேற்றிரவு அறிய முடிந்தது.
கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தாய ராஜபக்ச விலகுவார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று நாடாளுமன்றம் கூடும் என்றும் எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் கோத்தாபய ராஜபக்ச நேற்றே தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். அதனால் இன்று நாடாளுமன்றம் கூடுவது தடைப்பட்டுள்ளது.
ஆயினும் நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் திட்டமிட்டபடி, எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்று அறிய முடிகின்றது.
Discussion about this post