முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் அங்கிருந்து 17.8 மில்லியன் ரூபா மீட்கப்பட்டது.
இந்த பணம் தொடர்பிலேயே கோத்தாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணம் யாருடையது என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை. அது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் எழுப்பட்டிருந்தன.
Discussion about this post