கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்து வெளியேறியமைக்கு மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாம் பல்கலைக் கழகங்களில் வகித்த பதவிகளைக் கைவிட்டு, தொழில்களைக் கைவிட்டுக் கோட்டாபய ராஜபக்சவைப் பதவிக்குக் கொண்டுவரப் பாடுபட்டோம் என்று தெரிவித்த அவர், நாட்டை கோட்டாபய ராஜபக்ச சரியான வழியில் கொண்டு செல்வார் என்று நம்பினோம் என்றும் அவர் தெரிவித்தார்.
எமது எண்ணத்தின்படி சில மாதங்களே கோத்தாபய ராஜபக்ச செயற்பட்டார் என்று சுட்டிக்காட்டி சன்ன ஜயசுமன, அதன்பின்னர் நாம் கூறும் எதையும் அவர் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச கூறுவதைக் கூட கேட்க மறுத்த கோட்டாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்படச் சிலரின் ஆலோசனையின் பேரிலேயே செயற்பட்டார் என்றும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இப்போது இந்தப் பாவங்களை எம் தோள்களில் சுமத்த நாமல் ராஜபக்ச முயல்கின்றார் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டு மக்களின் இந்தத் துன்ப நிலைமைக்கு நாமல் ராஜபக்சவே முழுமையான காரணம் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post