கொள்கலன் ஊர்திகளின் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பொருள்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பல பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் கொள்கலன் ஊர்திகளின் போக்குவரத்துக் கட்டணம் நேற்றுமுதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை கொள்கலன் ஊர்தி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள நிலைமை காரணமாக எரிபொருள் தாங்கி வாகன உரிமையாளர்கள் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ளவது தொடர்பாக ஆலோசிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்போது மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post