நாட்டில் தற்போது கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளபோதும், அதனால் ஏற்படக் கூடிய பாரதூர தன்மை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனாத் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைந்தால் அது எந்தநேரத்திலும் பேரழிவை ஏற்படுத்தலாம். இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தவில்லை.
கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்ட மட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது.
பாடசாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
கொரோனா வைரஸ் மீண்டும் பரவினால் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post