வவுனியாவில் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவத்தனர்.
வவுனியா, செட்டிக்குளம், நேரியகுளத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
மூச்சுத் திணறல் காரணமாக வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, தென்மராட்சியில் நேற்று கொரோனாத் தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
Discussion about this post