சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றுமுன்தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த உயிரிழப்புகளுடன் கொரோனா தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களில் பெண் ஒருவரும் 7 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் 122 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post