கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் நேற்றைய
(27.08.2021) தினம் காணப்பட்ட இனம் தெரியாத சடலம் இன்று (28) கிளிநொச்சி
நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில்
மீட்கப்பட்டுள்ளது.
கை மற்றும் கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்டு வலையினால்
சுற்றப்பட்ட நிலையில் உருக்குலைந்த குறித்த சடலம் நேற்றைய தினம்
இனம்காணப்பட்டிருந்தது.
இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில்
நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலீஸாரினால் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதனால் கொலையாக இருக்கும் எனத்
தெரிவிக்கும் பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Discussion about this post