உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்தியாவின் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர்.
இந்த பேரிடரில், ஸ்ருதி எனும் யுவதி தாய், தந்தை, தங்கை உட்பட 9 பேரை இந்த நிலச்சரிவில் இழந்தார். அந்த அனர்த்தம் ஏற்பட்டபோது அவர் கோழிக்கோட்டில் பணிபுரிந்து வந்ததால், நிலச்சரிவில் சிக்காமல் உயிர் பிழைத்தார்.
காதலன் விபத்தில் பலி
செய்வதறியாது நிற்கதியாய் இருந்த ஸ்ருதியை, அவரது காதலர் ஜென்சன்தான் தேற்றியுள்ளார். இருவரும் காதலித்துவந்த நிலையில் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
தொடர்ந்து இவர்களின் திருமணமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறுவதாய் இருந்தது. அதற்குள் வயநாட்டில் இயற்கை பேரிடரானது ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட தங்களின் திருமணத்தை அவர்கள் நினைத்தபடி டிசம்பர் மாதம் நடத்திவிடலாம் என ஜென்சன் நினைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஜென்சன், ஸ்ருதியுடன் திருமண ஏற்பாடுகளுக்காக நேற்று (செப் 11) பயணித்துள்ளனர். இதற்காக ஸ்ருதியும், ஜென்சன் குடும்பத்தாரும் சென்றதாக தெரிகிறது.
அப்போது அவர்கள் பயணித்த வேனும் எதிரில் வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஜென்சன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தன் மொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதிக்கு, தற்போது அவரது காதலர் ஜென்சனும் விபத்தியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post