திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கீரிமலை, கூவிலைச் சேர்ந்த கந்தசாமி நிதர்சினி (வயது-27) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இவர் கெப்பிற்றிக்கெலாவில் குடும்ப நல உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார் என்றும் சுகவீனம் காரணமாக சில நாள்களுக்கு முன்னர் வீட்டுக்குத் திரும்பியிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
சுகவீனத்தை அடுத்து, கடந்த 26ஆம் திகதி இவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 27ஆம் திகதி மயக்க நிலைமைக்குச் சென்றுள்ளார். அதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Discussion about this post