கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில் தனியார் காணி ஒன்றில்
உள்ள பாழடைந்த கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் இனம் தெரியாத
நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதனை தொடர்ந்து ஊரவர்கள்
ஆராய்ந்த போதே கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம்
காணப்பட்டுள்ளது. பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட காணியில் உள்ள
கிணற்றிலேயே சடலம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த காணி சட்டவிரோத
செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள்
தெரிவிக்கின்றனர்.
பாயினால் சுற்றப்பட்ட நிலையில் கிணற்றில் சடலம் காணப்படுவதனால் தற்கொலை
கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பாக நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர்
கிளிநொச்சி பொலிஸாரல் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என
தெரிவிக்கப்படுகிறது.

Discussion about this post