கிளிநொச்சி கெளதாரி முனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்
சம்பவம் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக் கிழமை
கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில்
குளித்துள்ளனர். இதன் போதே இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார். கடலில்
மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி
வைத்தியசாலைக்கு கொண்ட சென்ற போது வழியில் குறித்த இளைஞன்
உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மீசாலையைச்சேர்ந்த 30வயதான தபாலக உத்தியோகத்தரே
உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட
பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை
பூநகரி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post