இந்தியப் பெரியண்ணர் இந்த முறை தமிழர்களின் விடயத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ள, இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய பூகோள அரசியலில் இந்தியாவுடன் கடுமையாக முரண்பட்டு கொள்ளும் சீனா இலங்கையை மையப்படுத்திய எனது புதிய நகர்வுகளை எடுத்திருக்கிறது.
அவ்வாறான புதிய நகர்வுகள் பழங்களின் இராஜதந்திரமாக உருவாக்கப்படுகிறது. இலங்கைத் தீவில் மாம்பழங்கள், அன்னாசிப் பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை உற்பத்தி செய்து அவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தமிழர்களின் கிளிநொச்சியையும் உள்ளடக்கிய திட்டங்களுக்கு சீனா தயாராகிவிட்டது.
சீனாவின் இந்தப் புதிய பழங்களின் இராஜதந்திரம் டெல்லிக்கு புதிய தலையிடியை நிச்சயமாகவே உருவாக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறை நடைமுறைப்படுத்திக்கொள்ளவென 9 பேர் கொண்ட சீன வல்லுநர்களின் குழு ஒன்று தற்போது இலங்கையில் உள்ளது.
களத்துறை, கம்பஹா, மொணராகல, அனுராதபுரம் ஆகிய தென்னிலங்கை மாவட்டங்களுடன் கிளிநொச்சி
மாவட்டத்திலும் சீனாவிற்கு தேவையான பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படப் போகின்றன.
கிளிநொச்சியை பொறுத்தவரை அங்கு அன்னாசி பழச் செய்கைக்கு வாய்ப்புகள் இல்லை என்றதால்,அனேகமாக
மாம்பழங்களும் வாழைப்பழங்களும் இனி சீனாவுக்காக உற்பத்தி செய்யப்படும் வகையில் கிளிநொச்சியிலும் தமிழர்கள் காணிகள் குறிவைக்கப்படப் போகும் சாத்தியங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
Discussion about this post