வீட்டில் இருந்த ’பிளக்கில்’ கைபிடியற்ற ஸ்குரு ட்ரைவரைச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்ரன் ஜினேசன் ஜினேஜினி (வயது-4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post