கிளிநொச்சி, செல்வா நகரில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லாலசிங்கம் என்ற 43 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தகரான இவர் இரு பிள்ளைகளின் தந்தை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது என கிளிநொச்சி பொலிஸார் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர்.
காலை ஆலயத்துக்குச் சென்ற பொதுமக்கள் அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இவரது உயிரிழப்புக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post