கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் நேரில் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வந்தால் அவர்களுடன் நானே நேரில் பேச்சு நடத்துவதற்குத் தயாராக உள்ளேன் என்று பிரதமர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்தாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது.
இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நேரடிப் பேச்சுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றிகொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post