புகலிடக்கோரிக்கையாளர்களை காலவரையறையின்றி தடுப்புக் காவலில் வைப்பது சட்டவிரோதமானது என உயர்நிதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், சுமார் 92 பேர் உடனடியாக விடுதலையாகக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என கருதப்படுகின்றது.
ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாத நபரொருவரை நாடு கடத்துவதில் சாத்தியம் ஏற்படாவிட்டாலும், அவரை காலவரையறையற்ற தடுப்புகாவலில் வைப்பதை அங்கீகரித்த Al-Kateb வழக்கு தீர்ப்பையும், மேற்படி தீர்ப்பு மாற்றியமைத்துள்ளது எனவும் , இதன்மூலம் 20 வருடங்களாக இருந்துவந்த நடைமுறை இனி இல்லாமல்போகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
” காலவரையற்ற காவலில் வைப்பதை அங்கீகரிக்கும் வகையில் விளக்கப்பட்ட இடம்பெயர்தல் சட்டத்தின் பிரிவுகள் , சட்டமியற்றும் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.” – என்று பிரதம நீதியரசர் Stephen Gageler இன்று புதன்கிழமை அறிவித்தார்.
இந்த தீர்ப்பால் 92 பேரை நாடு கடத்த முடியாமல்போகும் என உள்நாட்டலுவல்கள் திணைக்களம் கருதுகின்றது. அத்துடன் மேலும் தடுப்பில் உள்ள மேலும் 340 பேரை இனியும் வைத்திருக்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
10 வயது சிறார் வன்கொடுமை தொடர்பான குற்றவியல் தண்டனைக்காக, எந்த நாடும் அவரை மீள்குடியேற்ற ஒப்புக்கொள்ளாததால், வாழ்நாள் முழுவதும் தடுப்புக்காவலில் இருக்க வேண்டிய நிலையை எதிர்கொண்ட – நாடற்ற ரோஹிங்கியா நபரான NZYQ விற்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Discussion about this post