காரைநகர் – யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தடம்புரண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
காரைநகரில் இருந்து வேகமாக வந்த பேருந்து இன்னொரு வாகனத்தை முந்த முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதாக தெரிய வருகிறது. குறித்த பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post