இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவுஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்ச்ஸில் என்ற முன்னாள் காதலனால் கேபிள்களால் சுற்றப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாரிக்ஜோத் சிங் இந்த பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கவுரை கடத்திச் சென்று கொன்றதாக சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் உடலை பொலிஸார் கண்டுபிடித்த போது ஆழமற்ற இடத்தில் அப் பெண் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உறவில் ஏற்பட்ட முறிவைக் ஏற்றுக்கொள்ள முடியாமல் சிங் அந்த பெண்ணை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஸ்மீன் கவுரின் தாயார் ரஷ்பால், சிங் தனது மகள் மீது வெறித்தனமாக இருந்ததாகவும் அவரின் காதலை நூறு முறை மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு ஆழமற்ற கல்லறையில் அந்த பெண்ணின் உடல் கண்கள் கட்டப்பட்டு, கால்கள் கேபிள் டை மற்றும் கேஃபர் டேப்பால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post