யாழ்ப்பாணம் வலி. வடக்கில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், வலி.வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள், மதகுருக்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
Discussion about this post