Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காணாமல்போன கல்முனை மாணவன் கொழும்பில் மீட்பு; விசாரணை முன்னெடுப்பு

May 10, 2023
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
காணாமல்போன கல்முனை மாணவன் கொழும்பில் மீட்பு; விசாரணை முன்னெடுப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

காணாமல்போன அம்பாறை- கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை
உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக
வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மாயமானார்.

இந்தநிலையில் குறித்த சிறுவன் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து
மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திங்கட்கிழமை மாலை சகோதரியினால் மீட்கப்பட்ட குறித்த காணாமல் சென்ற மாணவன் தற்போது
பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை தலைமையக
பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை மாணவனைக் காணவில்லை என கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த மாணவன் சக மாணவர்களிடம் பாடசாலையை விட்டு பிற்பகல் 1 மணியளவில் பிஸ்கட் வாங்குவதாக கூறி துவிச்சக்கரவண்டியுடன் வெளியேறி செல்வது சிசிடிவி கமரா காணொளிகளில் அவதானிக்கப்பட்ட நிலையில் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சமூக ஊடகங்களிலும் காணாமல் சென்ற மாணவன் தொடர்பான தகவலுடன் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் காணாமல் போன மாணவனது சகோதரி திங்கட்கிழமை மாலை கல்முனை பகுதிக்கு வருவதற்கு
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனது சகோதரன்
தனிமையில் இருப்பதை உறுதிபடுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய உறவினர்கள் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து மேலதிக
விசாரணைக்காக கொழும்பு நோக்கி உறவினர்களுடன் கல்முனை தலைமையக பொலிஸார் சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Tags: #Colombo#Kalmunai#MissingKalmunai#Rescued#Student#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கணவனின் முன்னாள் மனைவியால் இரண்டாவது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

Next Post

இன்றைய ராசிபலன்கள் 11-05-2023

Next Post

இன்றைய ராசிபலன்கள் 11-05-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.