இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்குமிடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாத மத்தியில் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை -தம்பதிவ’ யாத்திரை யென அழைக்கப்படும் புத்தகாயா செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்ளுக்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பெரும் நிவாரணமாக அமையுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பயணக் கட்டணம் குறித்து கப்பல் உரிமையாளர்கள் கூறுகையில்,
ஒரு பயணிக்கான கட் டணம் 60 அமெரிக்க டொலர் என்பதுடன் 100 கிலோ எடையுள்ள பொருட்களையும் எடுத்துச் செல்லலாமென்றும் தெரிவித்தனர்
Discussion about this post