கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக கனடிய நாடாளுமன்றத்தில் மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதனை இந்தியா கண்டித்துள்ளது.
கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குருத்வாரா அருகே மர்ம நபர் களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியதை அடுத்து , இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்திய தூதரகம் பதிலடி
இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இதன்போது கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு பதிலடியாக 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 அப்பாவிகள் நினைவாக மௌன அஞ்சலி கூட்டம் நடத்தப்போவதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ,
தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்க மாக இந்தியா பணியாற்றி வருகிறது.
கடந்த 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39-வது ஆண்டு நினைவு நாள் ஜூன் 23-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 86 குழந்தைகள் உட்பட 329 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில் கொடூரமான தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.555555555555555555555555555555555
Discussion about this post