2024, ஜனவரி 1 முதல், சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அது தொடர்பாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் நலனின் அதீத அக்கறை கொண்டுள்ள மார்க் மில்லர், மாணவர்கள் கனடாவில் பணக்கஷ்டத்தை அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்!
மேலும், கனடாவில் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள்தான் காரணம் என சில அரசியல்வாதிகள் கூறியிருந்ததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதனால் மார்க் மில்லர் கடும் கடுப்படைந்துள்ளார் போலும், வீடுகள் தட்டுப்பாட்டுக்கு சர்வதேச மாணவர்களை குறை சொல்வது தவறுதான், அதே நேரத்தில், தங்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூடகொண்டுவராமல் கனடாவுக்கு வரலாம் என்று சர்வதேச மாணவர்களிடம் கூறுவதும் தவறுதான் என்று அவர் கூறுவதிலிருந்து, அவர் எந்த அளவுக்கு விமர்சனங்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
Discussion about this post