கனடாவில் பல்லாயிரக் கணக்கான சிறார்கள் சத்திர சிகிச்சைகளுக்காக காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மட்டும் 12000 சிறுவர் சிறுமியர் சத்திர சிகிச்சை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் பிரதான சிறுவர் நல மருத்துவ மனைகளில் சிகிச்சை வழங்குவதில் சிரமங்கள் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் காய்ச்சல் காரணமாக வழமையான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
கனடாவின் அநேக பகுதிகளில் சத்திர சிகிச்சைக்காக காத்திருக்க நேரிட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post