கனடாவில் ஒரு மில்லியன் டொலர் லொத்தர் சீட்டு பணப்பரிசில் உரிமை கோரப்படாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இட்டோபிகோக்கில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ம் திகதியுடன் லொத்தர் சீட்டு காலாவதியாவதாக ஒன்றாரியோ லொத்தர் மற்றும் கேமிங் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. காலாவதியாகு முன்னர் பணப்பரிசை பெற்றுக் கொள்ளுமாறு லொத்தர் சீட்டு நிறுவனம் கோரியுள்ளது. 49258332-04 என்ற இலக்கங்களுக்கு இந்த பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
அண்மையில் 2.87 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற நபர் ஒருவர் உரிமை கோரப்படாத நிலையில் அண்மையில் பரிசினை உரிமை கோரியுள்ளார்.
Discussion about this post