19 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக சுங்கப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 8.5 கிலோகிராம் தங்கம், 75,000 அமெரிக்க டொலர் மற்றும் 19,000 யூரோ என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த இருவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post