வடமராட்சி, சக்கோட்டையில் இருந்து நேற்றுமுன்தினம் கடற்றொழிலுக்குச் சென்ற நால்வர் இன்னும் கரை திரும்பவில்லை.
எரிபொருள் தட்டுப்பாட்டால் அவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
கடற்றொழிலுக்குச் சென்ற நால்வரும் நேற்று முற்பகல் 10 மணியளவில் கரை திரும்ப வேண்டும் என்றும், எனினும் அவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் இல்லை என்பதால், இது தொடர்பாகக் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களைத் தேடுதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Discussion about this post