முல்லைத்தீவு, புதுமாத்தளனில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரு சகோதாரர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இவர்கள் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக குடும்பத்தினர் நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், கடற்படையினர் அவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post