இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் பெறப்பட்ட கடன் தொகையானது முழு ஆண்டின் அரச செலவினத்தை விடவும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரல தலைமையிலான குழு மேற்கொண்ட ஆண்வில் தெரியவந்துள்ளது என்று பேராதனை மற்றும் ருகுணு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத்துறை விரிவுரையாளர் கலாநிதி நந்தசிறி கெம்பியஹெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்படி ஜனவரி மாத தொடக்கத்தில் அரசின் மொத்தக் கடன் 17 இலட்சத்து 18 ஆயிரத்து 900 கோடி ரூபாவாக இருந்துள்ளது.
இந்த வருடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த தொகை 23 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் அரசாங்கத்தின் நிகர கடன் அதிகரிப்பு 57 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post