இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 105 பழங்கால கலைப்பொருட்கள் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் முன்னிலையில் இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால கலைப் பொருட்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் பின்னர் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பொருட்கள் மிக விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி. 2 முதல் 3 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 18-19 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களை சேர்ந்தவை ஆகும்.
அவை டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்டவை. சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின் மற்றும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைவை என்றும் குறிப்பிடப்பிட்டுள்ளது.
Discussion about this post