கடதாசித் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று வரையறுக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
விநியோகஸ்தர்களிடம் கடதாசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தா கல்வியாண்டுக்கான பாடநூல்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நான்கு மில்லியன் பாடசாலை பாடநூல்களை அச்சிட சுமார் 3 மெற்றி தொன் கடதாசிகள் தேவை.
ஒரு மெற்றி தொன் கடதாசியின் விலை இரண்டு லட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது. பாடசாலை நூல்களை அச்சிடுவதே கூட்டுத்தாபனத்தின் பிரதான வருமான வழி. அது கிடைக்காது போனால், கூட்டுத்தாபனத்துக்கு ஆயிரத்து 200 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.
அதேநேரம், அரச நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்களை அச்சிட்டு கொடுப்பதற்கு தேவையான கடதாசிகளை பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு லொத்தர் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
அதேவேளை, டொலர் பற்றாக்குறை காரணமாக கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post