தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சதீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கச்சதீவை, நீண்ட காலக் குத்தகைக்கு பெற இந்தியா திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் நேற்றுக் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் கரிசனையுடன் செயற்படுகின்றோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் “இலங்கை தனது கடுமையான நாள்களைக் கடந்து வருகின்றது. அதன் நிலைமைகள் தொடர்பாக உங்களுக்கும் கரிசனை இருக்கும்.
நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கைக்கு கூடுமான ஒத்துழைப்புக்கள் அனைத்தையும் வழங்குகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post