கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் மதுபோதையில் இருந்தவர்கள், ரயில் பாதுகாப்பு ஊழியரை ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். அதில் ரயில் பாதுகாப்பு ஊழியர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை காலை வெயாக்கொடவுக்கு அருகில் நடந்துள்ளது. 55 வயதான பாதுகாப்பு ஊழியரே உயிரிழந்துள்ளார்.
ரயிலில் மதுபோதையில் ரகளை செய்த இருவரை பாதுகாப்பு ஊழியர் கண்டித்தபோது, முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்தவர்கள் பாதுகாப்பு ஊழியரை ஓடும் ரயிலில் இருந்து உதைந்து வெளியே தள்ளினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post