இயற்கை அதிசயங்களில் ஒன்றான உலகில் சுமார் 103 வகையான ஒளி உமிழும் காளான்கள் உள்ளன. இதில் 7 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இந்த வகை காளான்களின் வித்துகள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை பெற்றிருக்கின்றன.
இவ்வகையான காளான்களில் நடைபெறும் வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் இளம் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தின் கன்னியாகுமரி வன உயிரின சரணாலய பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற குழுவினர், ஒளிரும் காளான்களை புகைப்பட பதிவு செய்துள்ளனர்.
ஒளிரும் காளான்கள் தங்கள் விதை பரவலுக்கு உதவும் வகையில், பூச்சிகளை ஈர்ப்பதற்காகவே ஒளிரும் தன்மையை பெற்றிருக்கின்றன.
மற்ற காளான் வகைகளைப் போலவே இந்த வகை காளான்களும் பருவ மழைக்காலத்தில் மட்டுமே தென்படும் என கேள்விப்பட்டு, பழங்குடியின மக்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோரிடம் வினவியபோது பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
அப்போது, இதுபோன்ற ஒளிரும் காளான்களை வனத்துக்குள் பார்த்துள்ளதாக பழங்குடியினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து இரவில் வனத்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டோம்.
அதன் பலனாக இந்த வகை காளான்களை கண்டறிந்து பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டார்.
ஒளிரும் காளான்களை பதிவு செய்த வன உயிரின ஒளிப்பதிவாளர் ஜூடு, “இதேபோல, கேரளா, கோவாவில் ஒளிரும் காளான்களை புகைப்பட பதிவு செய்துள்ளனர்.
பகலிலும் இந்த வகை காளான்கள் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கும்.
ஆனால், வெளிச்சம் காரணமாக நம் கண்ணுக்கு தெரியாது.
இரவில், மற்ற எந்த வெளிச்சமும் இல்லாதபோது மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதும் இந்த வகை காளான்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன” என கூறினார்.
Discussion about this post